Sunday, July 8, 2018

துணி பையில் வாங்கினால் குழம்பு தூக்கு பரிசு

Added : ஜூலை 08, 2018 02:36


சேலம்:சேலத்தில், பாத்திரம், துணி பையுடன் வந்து டிபன், சாப்பாடு வாங்கினால், குழம்பு துாக்கு பரிசாக வழங்கப்படும் என, ஓட்டல் உரிமையாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.

'தமிழகத்தில், 2019 ஜன., 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஜூலை, 1 முதல், சேலம் மாநகர பகுதி அரசு அலுவலகங்களில், பிளாஸ்டிக் பயன்படுத்த, மாநகராட்சி கமிஷனர் தடை விதித்துள்ளார்.சேலம், அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பூபதிராஜன், 40 என்பவர், ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்த ஓட்டலில், 'ஜூலை, 1 முதல் டிசம்பர், 31 வரை, டிபன் வாங்க வருவோர், குழம்புக்கு பாத்திரம், பார்சல் கொண்டு செல்ல துணி பை, ஒயர் பைகளை கொண்டு வந்தால், 2019 ஜனவரியில், குழம்பு துாக்கு பரிசாக வழங்கப்படும்' என, அறிவித்து, ஓட்டலில், 'நோட்டீஸ்' ஒட்டியுள்ளார். இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளதோடு, பாத்திரம், துணி பைகளை, வாடிக்கையாளர்கள் கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024