Tuesday, July 10, 2018

செங்கோட்டை -கொல்லத்துக்கு பகல் ரயில் : மதுரை, விருதுநகர் பயணிகளுக்கு வசதி

Added : ஜூலை 10, 2018 02:18

ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை, விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்படும் வகையில் செங்கோட்டை- கொல்லம் இடையே பகல்நேர ரயில் இயக்கப்படுகிறது.செங்கோட்டையிலிருந்து காலை 11:30 மணிக்கு புறப்பட்டு மதியம் 3:40 மணிக்கு கொல்லம் செல்கிறது. மறு மார்க்கத்தில் கொல்லத்தில் காலை 10:30 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு மதியம் 2:35 மணிக்கு வருகிறது.மதுரையிலிருந்து காலை 7:15 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயிலின் மூலம் காலை 10:45 மணிக்கு செங்கோட்டை வந்தால், காலை 11:30 மணிக்கு புறப்படும் கொல்லம் ரயிலில் பயணிக்கலாம்.இதன்மூலம் கொல்லத்திலிருந்து மாலை 5:00 மணிக்கு கோட்டயம், 6:10 மணிக்கு திருவனந்தபுரம், மாலை 6:55 மணிக்கு குருவாயூர் செல்லும் ரயில்களை பிடித்து கேரளாவின் முக்கிய நகரங்களுக்கு குறைந்தகட்டணத்தில் பயணிக்கலாம்.கொல்லத்திலிருந்து காலை 10:30 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயிலில் பயணித்தால் செங்கோட்டையில் மதியம் 3:15 மணிக்கு புறப்படும் நெல்லை ரயிலை பிடித்து திருச்செந்துார், நாகர்கோவிலுக்கும், 3:40 மணிக்கு புறப்படும் ரயிலை பிடித்து விருதுநகர், மதுரைக்கும் செல்லலாம்.

பயண கட்டணமாக கொல்லத்திலிருந்து மதுரைக்கு ரூ.55, விருதுநகர் ரூ.45, ஸ்ரீவில்லிபுத்துார் ரூ.40 வசூலிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024