Tuesday, July 10, 2018

பெங்களூரு - சேலம் - புதுவை 15 முதல் விமான சேவை

Added : ஜூலை 10, 2018 02:02

சேலம்: சேலத்திலிருந்து, பெங்களூரு, புதுச்சேரிக்கு, 15 முதல், ஏர் - ஒடிசாவின் விமான சேவை துவங்குகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு நடக்கிறது.சேலம் காமலாபுரத்தில், 1993ல் விமான நிலையம் அமைக்கப்பட்டது. 6,000 அடி நீள ரன்வே உள்ளதால், இங்கு சிறிய ரக விமானங்கள் மட்டுமே இயக்க முடியும்.இதனால், இரண்டு முறை, தனியார் நிறுவனங்கள் மூலம், சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை துவங்கப்பட்டும், பயணியரிடையே வரவேற்பு இல்லாததால், அவை ஒரு சில மாதங்களில் நிறுத்தப்பட்டன.சிறு விமான நிலையங்களுக்கு உயிரூட்டும் வகையில், மத்திய அரசின், 'உதான்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், சேலம் வழியே விமானம் இயக்குவதற்கு, ஏர் - ஒடிசா நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.இருப்பினும் சேவை துவக்குவதில், தாமதம் ஏற்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்தான, 'ட்ரூஜெட்' விமான சேவையை துவக்கியது.தற்போது, ஏர் - ஒடிசா நிறுவனம், சேலம் விமான சேவைக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, 15 முதல், தினமும் காலை, 9:10 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு, 10:00 மணிக்கு சேலம் வந்தடையும். பின், 10:15க்கு சேலத்திலிருந்து புறப்பட்டு, பெங்களூருக்கு, 10:55க்கு சென்றடையும்.மீண்டும் அங்கிருந்து, 11:15க்கு புறப்பட்டு, மதியம், 12:00 மணிக்கு சேலம் வந்தடையும். சேலத்திலிருந்து, 12:15க்கு புறப்பட்டு, 1:30க்கு புதுச்சேரி செல்லும் வகையில், விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளது.ஒரு பயணத்துக்கு, உதான் திட்ட சலுகை கட்டணமாக, 1,860 ரூபாய், வணிக கட்டணமாக, 2,924 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 பயணியர் அமரும் வகையிலான சிறிய ரக விமானம், இச்சேவைக்கு இயக்கப்படுகிறது.இதற்கான பயண முன்பதிவு, ஏர் - ஒடிசா இணையதளத்தில் துவங்கியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024