Thursday, July 12, 2018

தந்தை மீது பழி சுமத்துவதா? : வங்கி பதில் அளிக்க உத்தரவு

Added : ஜூலை 11, 2018 23:18


சென்னை: வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என, தந்தை மீது பழி சுமத்திய வங்கி, ௧௦ லட்சம் ரூபாய் நஷ்டஈடு தர உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மாணவி மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, பாரத ஸ்டேட் வங்கிக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாகை மாவட்டத்தை சேர்ந்தவர், தீபிகா; பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்காக, ௩.௪௦ லட்சம் ரூபாய் கடன் கேட்டு, வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறில் உள்ள, பாரத ஸ்டேட் வங்கி கிளையில் விண்ணப்பித்தார்.

கடன் கோரிய விண்ணப்பத்தை, வங்கி நிராகரித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தீபிகா மனு தாக்கல் செய்தார்.வங்கி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'வெவ்வேறு வங்கிகளில் பெற்ற கடனை, மனுதாரரின் தந்தை செலுத்த தவறி உள்ளார்.'அவருக்கு எதிராக, வழக்குகள் உள்ளன. தந்தையின் வருமான சான்றிதழை, மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. விண்ணப்பத்தை நிராகரித்தது சரிதான்' என, கூறப்பட்டு உள்ளது.மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், 'கடன் தொகையை செலுத்த மாணவி தவறினால், பெற்றோரிடம் இருந்து தான், வசூலிக்கப்படும். 'கடன் தொகையை திருப்பி செலுத்தாததால், அவரது தந்தைக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிகிறது.

மனுதாரரின் தந்தை, கடன் தொகையை திருப்பி செலுத்தாததால், வங்கி சரியாக செயல்பட்டுள்ளது' என, கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவை எதிர்த்து, மாணவி தீபிகா, மேல்முறையீடு செய்தார். மனுவில், 'என் தந்தைக்கு, வங்கியில் கடன் நிலுவை இல்லை.'தவறான தகவல் அளித்து, தந்தையின் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக, ௧௦ லட்சம் ரூபாய் நஷ்டஈடு தரும்படி, வங்கிக்கு உத்தரவிட வேண்டும்' என, கோரிஇருந்தார்.இம்மனு, நீதிபதிகள் எச்.ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்துக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும், ௧௬ம் தேதிக்கு தள்ளி

வைத்தனர்.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...