Thursday, July 26, 2018

நாளை சந்திர கிரகணம் பரிகாரம் யாருக்கு தேவை

Added : ஜூலை 25, 2018 22:05

மதுரை, ஆடி பவுர்ணமியான நாளை (ஜூலை 27) சந்திரகிரகணம் நிகழ்கிறது. இந்தியா முழுவதும் தெரியும் இது இந்த நுாற்றாண்டின் நீளமான கிரகணம்.நாளை இரவு 11:54 மணிக்கு துவங்கும் கிரகணம் இரவு 3:49 மணிக்கு (3 மணி 55 நிமிட நேரம்) முடிகிறது. இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் சந்திரனை பார்க்க கூடாது. இரவு 8:00 மணிக்கு முன்பாக உண்பது நல்லது.வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள், கார்த்திகை, ரோகிணி, உத்திரம், அஸ்தம், பூராடம், உத்திராடம், திருவோணம்,அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி உள்ளவர்கள் கிரகணம் முடிந்த பின் கடல் அல்லது வீட்டிலேயே கல் உப்பு சேர்த்த நீரில் குளிக்க வேண்டும்.அதிகாலை 4:30க்கு மேல் சந்திரனை பார்க்கலாம். பரிகார ராசியினர் ஜூலை 28 சனிக்கிழமை காலை கட்டாயம் கோயிலுக்கு செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024