Sunday, July 15, 2018

ரயில் அபாய சங்கிலியை இழுத்த பயணியரிடம் ரூ.2.8 லட்சம் வசூல்

Added : ஜூலை 15, 2018 00:58 |

சென்னை:உரிய காரணமின்றி அபாய சங்கிலியை இழுத்து, ரயிலை நிறுத்திய பயணியரிடம், 2.8 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அவசர கால உதவிக்கும், அசம்பாவிதம் ஏற்படும் போதும், ரயிலை நிறுத்த ஏதுவாக, பெட்டிகளில் அபாய சங்கிலிகள் பொருத்தப்பட்டு உள்ளன.கடந்த, 1989ம் ஆண்டு ரயில்வே சட்டப்படி, உரிய காரணமின்றி அபாய சங்கிலியை பிடித்து இழுத்தால், 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையிலும் பல்வேறு பயணியர், உரிய காரணமின்றி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, ரயிலை நிறுத்துவது தொடர்கிறது.

 பயணியரின் இந்த பொறுப்பற்ற செயலை தடுக்க, தெற்கு ரயில்வே துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அதன்படி, ரயில் பெட்டியில் இருந்து உடைமைகள் தவறி கீழே விழுந்து விட்டது, நிலையங்களில் தண்ணீர் பிடிக்க சென்ற போது ரயில் புறப்பட்டுவிட்டது, உடைமைகளை காணவில்லை போன்ற சின்ன சின்ன காரணங்களுக்காக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தியதாக பயணியர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், 2018 ஜூன் வரை, ரயில்களில் அபாய சங்கிலியை இழுத்த பயணியர், 744 பேர் மீது, தெற்கு ரயில்வேயில் புகார் பதிவு செய்யப்பட்டது.இதில், 737 பேரிடம், 2.8 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் நேர்ந்தால், ரயில்வே பாதுகாப்பு படை உதவி மையத்திற்கு, 182 மற்றும் 1512 என்ற எண்களிலும், ரயில்வே பயணியர் உதவி மையத்திற்கு, 138 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவையற்ற காரணங்களுக்காக, அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தக் கூடாது என, ரயில்வே நிர்வாகம் சார்பில், பயணியருக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024