Sunday, July 8, 2018

எதற்கெல்லாம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தலாம். தமிழக அரசு அறிவிப்பு...! 

 8.7.2018

  2019 ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி

சட்டசபையில் அறிவித்தார். இந்நிலையில், இதற்கான அரசாணையை நேற்று தமிழக அரசு  பிறப்பித்துள்ளது...!

  மேலும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான "பால், தயிர், எண்ணெய், மருந்து" பொருட்களுக்கான உறைகள் ஆகியவற்றிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டடுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது...!

  இதற்கான அரசாணையை சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுதின் நேற்று வெளியிட்டார். அதில், சில பிரிவுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது...!

  சிறப்புப் பொருளாதார மண்டலம், ஏற்றுமதி சார்ந்த ஆலைககள் ஆகியவற்றில் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பைக்கு தடைஇல்லை...!

 இதே போல்,  உற்பத்தி அல்லது பதனிடுதலில் சிப்பம் கட்டவும் (பேக்கிங்), மூடி முத்திரை இடும் பணிக்காகவும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தலாம்...!

 அரசுத் துறைகளின் கொள்முதல் உத்தரவைப் பெற்றுள்ள மலர் சாகுபடி மற்றும் தோட்டக்கலை மையங்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தலாம்...!

 பால் மற்றும் பால் பொருள்கள், எண்ணெய், மருந்து மற்றும் மருந்து உபகரணங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தத் தடை இல்லை...!

  பிளாஸ்டிக் பைகளைத் தயாரிக்கும் போது அவற்றில், மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்குகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட வேண்டும்...!

மேலும், அதில், இந்திய தரச் சான்று 17088: 2088 உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...