Sunday, July 8, 2018

முதல் கட்டக் கலந்தாய்வு நிறைவு: 7 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடம் 

08.07.2018

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வில் அரசுப் பள்ளிகளில் படித்த 7 பேருக்கும்  அரசு உதவி பெறும் பள்ளிகளின் 13 பேருக்கும் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்துள்ளது.

முதல் கட்டக் கலந்தாய்வு நிறைவு: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. அரசு மருத்துவக் கல்லூரிகள்-சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியின் இடங்கள் என 2,639, தனியார் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 862 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளிட்டவை முதல் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்பட்டன. சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களும் முதல் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்பட்டன.

2,805 மாநில பாடத் திட்ட மாணவர்கள்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வில் மொத்தம் 3,882 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது; இவர்களில் 3,500-க்கும் மேற்பட்டோருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைத்துள்ளது; மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 2,805 பேருக்கும், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர பாடத் திட்டத்தில் படித்த 1,077 மாணவர்களுக்கும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

669 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்கள்: தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 1045 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில், 376 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் முதல் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்பட்டன. முதல் கட்ட கலந்தாய்வு நிறைவுக்குப் பிறகு 669அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...