Sunday, July 8, 2018

திருமணம் முடிந்த உடனே இறந்து போன மணப்பெண் - தெலுங்கானாவில் சோகம்!


சி.வெற்றிவேல்  08.07.2018

தெலுங்கானாவில் திருமணம் முடிந்த மறு நிமிடம் மணப்பெண் மாரடைப்பால் இறந்து போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணம் முடிந்ததும் மணப்பெண் கணவன் காலில் சரிந்து விழுந்து இறந்த துயரம் திருமணத்துக்கு வந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



தெலுங்கானாவில் இருக்கிறது மெகபூப் நகர் மாவட்டம். அங்கு அச்சம் பேட்டையில் வெங்கடேஷ், லட்சுமி ஆகியோருக்கு இடையே திருமணம் நடைபெற்றது. திருமண சடங்கில் அனைவரும் திளைத்திருந்தனர். திருமணம் முடிந்ததும் கணவன் வெங்கடேஷ் மற்றும் மனைவி லட்சுமியை அருந்ததி நட்சத்திரம் பார்ப்பதற்கு வெளியே அழைத்துச் சென்றனர். அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கும் நிகழ்வில் திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக லட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வெங்கடேசன் மீது சரிந்தார். அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு லட்சுமியை அழைத்துச் செல்கையில் அவர் ஏற்கெனவே இறந்தது போன செய்தி தெரியவந்தது.

திருமணம் நடந்து முடிந்த உடனே மணப்பெண் இறந்து போனது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...