Saturday, July 28, 2018

காசி யாத்திரைக்கு சிறப்பு ரயில்

Added : ஜூலை 27, 2018 20:49

கோவை, : இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில், ஆக., 7ல் காசி யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.மதுரையில் இருந்து, 'ஆடி அமாவாசை காசி யாத்திரை' எனும் பெயரில் புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சென்னை வழியாக, காசி செல்கிறது. அங்கு, கங்கையில் முன்னோர்களுக்கு மரியாதை செய்தல்; விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தரிசனம்.கயாவில் ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துதல்; விஷ்ணுபாத தரிசனம், அலகாபாத் திரிவேணி சங்கமம்; ஹரித்வாரில் மானசா தேவி ஆலய தரிசனம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், டில்லியில் உள்ளூர் சுற்றிப்பார்த்தல், மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி தரிசனம் செய்தல் என, 12 நாட்கள் யாத்திரைக்கு, 11 ஆயிரத்து, 340 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முன்பதிவுக்கு, 90031 40655 ; 90031 40681 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்புகொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., கூடுதல் பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024