Saturday, July 28, 2018

முதல் ஆண்டு மருத்துவம் ஆக., 1ல் வகுப்பு துவக்கம்

Added : ஜூலை 27, 2018 21:54

கோவை, முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு, ஆக., 1ல் வகுப்புகள் துவங்க உள்ள நிலையில், கவுன்சிலிங் நடைமுறைகளை விரைவுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், அரசு ஒதுக்கீட்டில், 3,328; நிர்வாக ஒதுக்கீட்டில், 516 இடங்கள் உள்ளன. பல் மருத்துவமான, பி.டி.எஸ்.,சில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,198; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 715 இடங்கள் உள்ளன.மொத்தமுள்ள, 5,757 இடங்களுக்கு, 47 ஆயிரத்து, 347 பேர் விண்ணப்பித்தனர். இதற்கான கவுன்சிலிங் நிறைவடைந்துள்ளன. மாநில ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், மத்திய அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் இன்னும் நிரம்பவில்லை. ஆக., 1 முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளன. இதைக்கருதி, கவுன்சிலிங் நடைமுறைகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:வரும், 1ம் தேதி வகுப்புகள் துவங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மருத்துவக் கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பல கல்லுாரிகளில், மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. மாநில அரசிடம் அவ்விடங்கள் ஒப்படைக்கப்படும் பட்சத்தில், விரைந்து நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கவுன்சிலிங் நடைமுறைகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை, தயார் நிலையில் வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024