Saturday, July 28, 2018

மருத்துவ கவுன்சிலிங்கில் யாரெல்லாம் பங்கேற்கலாம்

Added : ஜூலை 27, 2018 22:42

சென்னை, மருத்துவ கவுன்சிலிங் நிர்வாக ஒதுக்கீட்டில், சிறுபான்மையின மாணவர்கள் யாரெல்லாம் பங்கேற்கலாம் என, மருத்துவ தேர்வுக்குழு அறிவித்துள்ளது.தனியார் மருத்துவ கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு, எம்.பி.பி.எஸ் - பி.டி.எஸ்., இடங்களுக்கான கவுன்சிலிங், வரும், 30, 31ல், நடைபெற உள்ளது. இந்நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டு கவுன்சிலிங்கில், சிறுபான்மையின மாணவர்கள் பங்கேற்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவ கல்வி தேர்வுக்குழு செயலர் செல்வராஜன், நேற்று வெளியிட்ட அறிவிப்பு:வரும், 30ல், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும். அதன்பின், தரவரிசை பட்டியலில், 1 முதல், 2,519 வரை பெற்ற மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.வரும், 31ல், சிறுபான்மையின மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும். சிறுபான்மை கல்லுாரிகளுக்கான கவுன்சிலிங்கில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, மலையாளம் அல்லது தெலுங்கு மொழியை தாய்மொழியாக படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்கலாம்.நீட் தரவரிசை, 2,520 முதல், 18 ஆயிரத்து, 915 வரை உள்ள சிறுபான்மையின மாணவர்களை தவிர, வேறு மாணவர்கள் பங்கேற்க வேண்டாம். பிற்பகல், வேலுார் கிறிஸ்தவ கல்லுாரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024