Saturday, July 28, 2018


கேரளா - எழும்பூர் சிறப்பு ரயில்

Added : ஜூலை 27, 2018 22:38

சென்னை, கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து, திருவனந்தபுரம், நாகர்கோவில், மதுரை வழியாக, சென்னை எழும்பூருக்கும்; எர்ணாகுளத்தில் இருந்து, கோவை, சேலம், திருப்பத்துார் வழியாக, கர்நாடக மாநிலம், யஷ்வந்த்பூருக்கும், சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன.•கொச்சுவேலியில் இருந்து, நாளை மதியம், 1:45க்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், மறுநாள் காலை, 7:20 மணிக்கு, சென்னை எழும்பூர் சென்றடையும்•கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து, ஆக., 1, 8, 15, 22, 29, செப்., 5, 12, 19 மற்றும் 26ம் தேதிகளில் மதியம், 2:45க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் அதிகாலை, 4:30 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும்.இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024