Saturday, July 28, 2018

தனியார் நிகர்நிலை பல்கலைகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் கட்டாயம்

Added : ஜூலை 27, 2018 22:30

சென்னை, 'தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெறாத பாடப்பிரிவுகளில், மாணவர்களை சேர்க்கக் கூடாது' என, தனியார் நிகர்நிலை பல்கலைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கும், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதன்படி, இன்ஜி., கல்லுாரிகள் அனைத்தும், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற வேண்டியது கட்டாயம். அதேபோல, ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், தேசிய அங்கீகார அமைப்பான, என்.பி.ஏ.,வின் அங்கீகாரமும் பெற வேண்டும்.அதேபோல, நிகர்நிலை அந்தஸ்து பெற்றுள்ள, ஒவ்வொரு பல்கலையும், இன்ஜினியரிங், மேலாண்மை, பார்மசி உள்ளிட்ட படிப்புகளில், மாணவர்களை சேர்க்க, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரத்தை பெற வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும், 2018க்கான அங்கீகார கையேட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எந்த நிகர்நிலை பல்கலையும், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெறாமல், தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்களை சேர்க்கக் கூடாது; அவ்வாறு சேர்ப்பது சட்ட விரோதம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தனியார் நிகர்நிலை பல்கலைகள், யு.ஜி.சி., என்ற, பல்கலை மானியக் குழுவின் அங்கீகாரம் மட்டும் பெற்று, அனைத்து வகையான படிப்புகளையும் தன்னிச்சையாக நடத்தின. ஆனால், இந்த ஆண்டு முதல், தொழில்நுட்ப கல்விக்கு, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதி கட்டாயம் ஆகியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024