வங்கியிலிருந்து போன் வருதா ஏ.டி.எம்., நம்பரை சொல்லாதீங்க
Added : ஜூலை 27, 2018 22:29புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி நுாதன முறையில் பணமோசடி நடந்து வருகிறது.புதுக்கோட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் லட்சுமி, 46. நேற்று முன்தினம், இவரது அலைபேசிக்கு அழைப்பு வந்தது.அதில் பேசியவர் 'நான் வங்கி மேலாளர் பேசுகிறேன். உங்களது வங்கி ஏ.டி.எம்., கார்டு காலாவதியாகி விட்டது. இதனால், ஏ.டி.எம்., கார்டு நம்பரை கொடுங்க' என லட்சுமியிடம் கூறியுள்ளார்.இதை உண்மையென்று நம்பிய அவர் வங்கி ஏ.டி.எம்., கார்டு நம்பரை தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் இரு தவணையாக லட்சுமி வங்கி கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ்., வந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று மனு கொடுத்துள்ளார். பின் புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.இதே போல் கீரமங்கலம் வி.ஏ.ஓ., உதவியாளர் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆகியோருக்கு வங்கியிலிருந்து பேசுவதாக, அழைப்பு வந்தது.இதில் சுதாரித்துக் கொண்ட இவர்கள் அழைப்பை துண்டித்து விட்டனர். சில நாட்களாக புதுகை மாவட்டத்தில் பலருக்கு இதுபோன்று நுாதன முறையில் பணம் கொள்ளையடிக்கும் நபர்களிடமிருந்து, அலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது.
No comments:
Post a Comment