Thursday, July 12, 2018

ஏழைகளுக்கு உதவுவதே சிறந்த தொண்டு: ரஜினி 

dinamalar 12.07.2018

சென்னை : ''காசிக்கு சென்று இறைவனை காண்பதை விட, ஏழைகளுக்கு உதவுவதே இறை தொண்டு,'' என, நடிகர் ரஜினி பேசினார்.



வெளிநாட்டு பல்கலையில், டாக்டர் பட்டம் பெற்ற, புதிய நீதிக்கட்சி தலைவர், ஏ.சி.சண்முகத்திற்கு, சென்னையில், தனியார் அமைப்பு சார்பில், நேற்று பாராட்டு விழா நடந்தது.

இதில், நடிகர் ரஜினி பேசியதாவது: ஏ.சி.சண்முகத்தை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கும். அவர், பல கல்வி நிறுவனங்களை நடத்தி, அதன் வழியாக, நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார். எப்போதும் அவர் டென்ஷன் இல்லாமல், புத்துணர்ச்சியோடு இருக்கிறார். அவரது முடி கூட, அப்படித்தான் இருக்கிறது.

பரமஹம்சர் ஒரு நாள் காசிக்கு செல்ல நினைத்து, சேர்த்து வைத்த பணத்தோடு புறப்பட்டார். போகும் வழியில், சில ஏழைகளை கண்டார். வைத்திருந்த பணத்தை, அவர்களுக்கே செலவு செய்தார். அதன் வழியாக, அவர்கள் முகத்தில் இறைவனை கண்டு, காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டதாக கூறினார். ஏழைகளுக்கு உதவி செய்வது தான் இறை தொண்டு.

உழைப்பு, முயற்சியால் மட்டுமே எல்லாரும் வெற்றி பெற முடியாது. ஆண்டவன் அருள் வேண்டும். நமக்கு நல்ல எண்ணம் வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும். மனம் போகும் போக்கில் போகக்கூடாது. நம் உடலை சுத்தமாக வைத்து கொண்டால், மனமும் சுத்தமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...