Saturday, July 7, 2018

கார் வாங்கணுமா? ​இதை மிஸ் பண்ணிடாதீங்க! - Sponsored Content.



.

vikatan

ஒரு கார் வாங்கணும்! நல்லா உழைக்கணும், நல்ல இடவசதி இருக்கணும், ஸ்மூத்தா ஓடணும். சுருங்கச் சொன்னா, பார்க்கவும் சரி, ஓட்டவும் சரி, ஜம்முனு இருக்கணும், இதுதான் கார் வாங்க நினைக்கும் பலரின் ஆசை. சொந்த வீட்டுக்கு அடுத்தபடி சொந்தக் கார், நாம் செய்யும் பெரிய முதலீடுகளில் ஒன்றாகும். அப்படி வாங்கும் கார், அம்மா அப்பா, மனைவி குழந்தைகள் எல்லோருக்கும் பிடிக்கணும். ஒரு குடும்பத்தின் முதல் கார், அந்தக் குடும்பத்தின் அங்கமாக மாறிவிடுகிறது. ஏன், பலருக்கு அவர்களின் கார் நெருங்கிய உறவுகளில் ஒன்று. ரஜினி நடித்த 'படிக்காதவன்', விஜய் சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும்' படமெல்லாம் நாமும் பார்த்திருக்கிறோம்தானே!



பட்ஜெட்டுக்குள் பிரமாண்டமான​ கா​ரை​ வாங்க நினை​ப்பவர்களுக்கும்​ பழைய காரை மாத்திட்டு புதுசுக்கு மாற நினைப்பவர்களுக்​கும்​, ஹோண்டா நிறுவனம் 'அமேஸ்' காரை அறிமுகப்படுத்தியிருக்காங்க. 'அமேஸ்' 2013ல் ஹோண்டா அறிமுகப்படுத்திய கார். இப்போது, ​​'அமேஸ் 2018' வெர்ஷன் வந்திருக்கு. முந்தைய வெர்ஷனைவிடப் புது வெர்ஷனில் என்னென்ன சிறப்பு இருக்கு... இது நமக்கு ஏற்ற கார்தானா... நம்பி வாங்கலாமா? இதோ நம் ரிப்போர்ட்:

முதலில், கார் பார்க்க எப்படி?

ஆர்கிட் பியர்ல் வைட், ​​ரேடியன்ட் ரெட்,​ மாடர்ன்​ மெட்டாலிக் ஸ்டீல், லூனார் சில்வர் மற்றும் கோல்டன் பிரௌன் என கண்ணைக் கவரும் ​ஐந்து நிறங்களில் ​வருகிறது​ ​அமேஸ்​. இதன் வெளிக்கட்டமைப்பு ஹை டென்ஸைல் ஸ்டீலால் ஆனது என்பதால், இது முன்பைவிட உறுதியானதாக இருக்கிறது (பழைய அமேஸைவிடப் புதிய அமேஸ் 40 கிலோ எடை குறைவு!). அமேஸின் பேனட், மேல் நோக்கித் தூக்கப்பட்ட விதத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பது, காரின் முன் பக்கத்துக்குப் புதிய ஸ்டைலைக் கொடுத்திருக்கிறது. இம்முறை, அமேஸ் வீல் பேஸ் (முன் பின் சக்கரங்களுக்கு இடையிலான இடைவெளி) 65 மி.மீ அதிகமாகியிருக்கிறது. இதனால், முன்பைவிட அமேஸ் இப்போது அதிக இட வசதியுள்ள காராக மட்டுமன்றி, கவர்ச்சியான காராகவும் மாறியிருக்கிறது.

காரின் டாஷ்போர்டில் பியானோ ப்ளேக் ( Piano Black) பினிஷ் மற்றும் தரமான ஹார்டு பிளாஸ்டிக் உபயோகப்படுத்தியிருப்பது பார்க்க நன்றாகவே உள்ளது. ஏர் கண்டிஷன் கன்ட்ரோலர்கள் ஸ்மூத்தாக இருக்கின்றன, ஹோண்டாவின் தரம் இதில் வெளிப்படுகிறது. 7 இன்ச் டச் ஸ்கிரீனில் ஆப்பிள்​ கார்​ பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் சாட்டிலைட் நேவிகேஷன் வசதி உண்டு. சொகுசான லுக் உள்ள கார் கேட்கும் கணவன் மனைவிக்கு, பார்த்தாலே பிடித்துப்போகும்!

இட வசதி:

உயரம் மற்றும் அகலத்தில், முன் சீட் பயணிகளுக்குத் தாராளமாக இடமுள்ளது. வீல் பேஸ் அதிகரித்துள்ளதால், சரியான கோணத்தில் பின் சீட்டுகளின் சாய்மானம் இருப்பதால், வயதானவர்கள் பின்சீட்டில் உட்கார வசதியாக இருக்கும், காலை நீட்டி மடக்கவும் போதுமான இடம் இருக்கிறது. வயதான பெற்றோர் நிம்மதியாக பின் சீட்டில் உட்கார்ந்து வரலாம்! பாட்டில், போன் போன்ற விஷயங்களை வைக்க காரில் போதுமான இடம் இருக்கிறது. 420 லிட்டர் கெப்பாசிட்டி டிக்கியில், ஒரு குடும்பத்துக்குத் தேவையான அளவு ​பொருள்களை வைத்துச் செல்ல வசதியிருக்கிறது!

பாதுகாப்புக்கு முக்கியத்துவம்:

குடும்பத்தோடு காரில் பயணிக்கும்போது, அதிகமாக பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது ஹோண்டா. ஆன்டி லாக் பிரேக்கிங் & எலெக்ட்ரானிக் பிரேக் போர்ஸ் சிஸ்டம் வீல்கள் லாக் ஆவதைத் தடுத்து, கார் அதிக வேகத்தில் சறுக்காமல் காக்கிறது. ஆபத்துச் சமயங்களில் உதவ 2 காற்றுப்பைகள் இருப்பது பெரிய அனுகூலம். குழந்தைகளின் பாதுகாப்புக்கான isofix சீட் ஆகியவை எல்லா வேரியன்ட்டுகளிலும் இருக்கிறது.



இன்ஜின்​:​​​

பெட்ரோல் மேனுவல் & ​ CVT ​ஆட்டோமேட்டிக்​ ​ (1.2 லிட்டர்), டீசல் மேனுவல் & ​ CVT ​ஆட்டோமேட்டிக் (1.5 லிட்டர்) இன்ஜின்கள் என்று நான்கு விதமான ஆப்ஷன்களை ஹோண்டா கொடுக்கிறது​.​ 100 bhp திறன்கொண்ட 1.5 லிட்டர் டீசல் மேனுவல், முந்தைய அமேஸைப் போலவே நாம் இடும் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுகிறது. காரின் வேகம் கூடக்கூட, தேவைக்கு ஏற்ப சக்தி சீராக அதிகரிக்கிறது. இன்ஜின் அதிர்வுகளும் சத்தமும் குறைவாக உள்ளன - இதில் ஹோண்டாவின் முயற்சி வெற்றியடைந்துள்ளது என்றே சொல்லலாம்.​ ​1,800 rpm-ஐத் தாண்டியதும் சக்தி மேலும் பிரவாகம் எடுக்கிறது. 3,800 rpm வரை கேட்கக் கேட்க உடனுக்குடன் சக்தி கிடைக்கிறது. இன்ஜின் சத்தத்தையும் அதிர்வுகளையும் கட்டுப்படுத்த ஹோண்டா எடுத்திருக்கும் முயற்சிகள் நல்ல பலன் கொடுத்திருப்பதை உணர முடிகிறது. ஐந்து கியர்களைக் கொண்ட கியர்பாக்ஸ் இயக்குவதற்கு ஸ்மூத்தாக இருக்கிறது. கிளட்சில் எந்தப் பிரச்னையும் இல்லை. ​

​பெட்ரோல் மேனுவல் அமேஸைப் பொறுத்தவரை, நகர்ப்புறத்தில் ஸ்மூத்தாகவும், சத்தமில்லாமலும் இயக்குவதற்கு இது வசதியாக இருக்கிறது.

​​ C​VT ஸ்பெஷாலிட்டி: இந்தியாவிலேயே, டீசல் CVT ஆட்டோமேட்டிக் அம்சம் ஹோண்டா அமேஸ் காரில்தான் முதல்முறையாக ​அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (தற்போது வேறு எந்தக் காரும் இந்த மாடலில் கிடையாது!) சாதாரண ஆட்டோமேட்டிக் வகையைக் காட்டிலும் CVT ஆட்டோமேட்டிக் ஓட்டுவதற்கு ஸ்மூத்தாக இருக்கிறது, எபீஷியென்சி பிரமாதம். மேலும், மைலேஜிலும் எந்த சமரசமும் இல்லை!



​​அமேஸ்​​ காரை வாங்க விரும்பினால், க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டியரிங் அட்ஜஸ்ட்மென்ட், கிளைமேட் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். சாவி இல்லாமல், பட்ட​ன் ( Keyless Smart Entry)​ மூலம்​​ காரை ஸ்டார்ட்செய்யும் வசதி ஜோர்.

ஏ.சி கம்ப்​ரெஸரின் திறன் மேம்பட்டிருப்பதால், முன் சீட்டுகளுக்கான ஏ.சி வென்ட் மூலம் பின் சீட்டுகளுக்கும் குளிர் பரவிவிடுகிறது. சஸ்பென்ஷன் - பழைய அமேஸைவிட மேடு பள்ளமான சாலைகளைப் புதிய அமேஸ் நன்றாகவே சமாளிக்கிறது.

'வரலாம் வரலாம் வா' என ஒருவர் காரின் பின்பக்கம் நின்று இனி கத்தத் தேவையில்லை. பார்க்கிங் செய்வதற்கு வசதியாக பின்பக்க சென்சார் மற்றும் கேமரா உதவுகிறது.

​​மைலேஜ்:

19.5 kmpl (MT)/ 19kmpl (CVT)

27.4kmpl (MT)/ 23.8kmpl (CVT)​

மொத்தமாகச் சொன்னால், குடும்பத்துக்கு ஏற்ற வகையில் ஸ்டைலான, பாதுகாப்பான, இடவசதி கொண்ட காராக ஹோண்டா அமேஸ் திகழ்கிறது. 5 நபர்கள் அமரக்கூடிய செடான் வகை கார்களில் இப்போதைக்கு 'அமேஸ் இஸ் ரியலி அமேஸிங்' என்றுதான் சொல்லணும்! படித்தால் போதுமா... நீங்களே அமேஸ் 2018 பற்றி அறிந்துகொள்ள, இப்போதே டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கலாம். கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும், கார் உங்களைத் தேடி வரும்!

https://www.vikatan.com/special/honda-amaze/
honda

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024