Tuesday, July 10, 2018


மிஸ்டு கால் வந்தால் உஷார்!

Updated : ஜூலை 10, 2018 10:32 | Added : ஜூலை 10, 2018 10:30 |



திருவனந்தபுரம்: மொபைல் போனுக்கு சர்வதேச போன் எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்தால் உஷாராக இருக்க வேண்டும் என கேரள போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மிஸ்டு கால் வந்த எண்ணை தொடர்பு கொண்டால் ஏராளமான பணத்தை இழக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வான்கிரி' மோசடி

கடந்த ஆண்டு இறுதியில், பல்வேறு நாடுகளில் இந்த மோசடி நடந்துள்ளது. 'வான்கிரி' என்று அழைக்கப்படும் இந்த மோசடி பற்றிய விவரம் வருமாறு:

ஜப்பானிய மொழியில், 'வான்கிரி' என்றால், ' ஒரு ரிங்; உடனே கட்' என்று பொருள். கேரளாவில் உள்ள மொபைல் போன்களுக்கு + 591 என்று துவங்கும் எண்ணில் இருந்து அழைப்புகள் வருகின்றன. இந்த அழைப்புகள் பொலிவியா நாட்டில் இருந்து வருகின்றன. ஒரு ரிங் வந்த பிறகு அழைப்பு கட் ஆகி விடும். தெரியாமல் அந்த எண்ணை தொடர்பு கொண்டால், ஒரு நிமிடத்திற்கு 200 ரூபாய் வீதம் இழக்க நேரிடும். எனவே சர்வதேச எண்ணில் இருந்து மிஸ்டு கால் வந்தால் உஷராக இருக்க வேண்டும் என கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.





No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024