நீட் தேர்வு: கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு
Updated : ஜூலை 10, 2018 11:44 | Added : ஜூலை 10, 2018 11:11 |
மதுரை: நீட் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண் வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., ரங்கராஜன் ஐகோர்ட் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழிபெயர்ப்பில் அதிக குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், சிபிஎஸ்இ சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறதா எனக்கேள்வி எழுப்பி தீர்ப்பை ஒத்திவைத்தது
புது பட்டியல்
இந்நிலையில், தீர்ப்பு வழங்கிய கோர்ட், பிழையாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண் வழங்க வேண்டும். பின்னர் புதிய தர வரிசை பட்டியலை 2 வாரத்தில் வெளியிட்டு மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். தற்போதைய கவுன்சிலி்ங் நிறுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment