Sunday, June 2, 2019

வேட்டி கட்ட அனுமதி அரசு ஊழியருக்கு சலுகை 

Added : ஜூன் 02, 2019 00:32

சென்னை: 'அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள், தமிழர்களின் கலாசார உடையான வேட்டி அணிந்து வரலாம்' என, தமிழக அரசு,அறிவித்துள்ளது.

தமிழகத்தில், அரசு அலுவலகங்களில் பணிபுரியும், ஆண்கள் மற்றும் பெண்கள், நேர்த்தியாக, துாய்மையான உடைகளை அணிந்து வர வேண்டும்.பெண்கள், சேலை, சல்வார்கமீஷ், சுடிதார் அணிந்து வரலாம். சுடிதாருடன் துப்பட்டா அவசியம்.ஆண் ஊழியர்கள், பேண்ட், சட்டையில் வர வேண்டும் என, சில தினங்களுக்கு முன், தமிழக அரசு உத்தரவிட்டுஇருந்தது.அந்த உத்தரவில், ஆண் ஊழியர்கள், தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும், வேட்டி மற்றும் இந்திய கலாசாரத்தை பிரதிலிக்கும் உடைகளை அணிந்து வரலாம் என, திருத்தம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட உத்தரவு, நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024