Sunday, June 2, 2019

பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை அசல் சான்றிதழ்

Added : ஜூன் 02, 2019 00:37

சென்னை,:பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், நாளை அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வு துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:மார்ச்சில், பிளஸ் 2 தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், நாளை வழங்கப்படுகின்றன. மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனி தேர்வர்கள், தேர்வு மையம் அமைக்கப்பட்ட பள்ளிகளிலும், சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரண்டு வகுப்புகளுக்கான, பொதுத் தேர்விலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், தனித் தனியாக வழங்கப்படும். இரண்டு வகுப்புகளிலும் முழுமையாக தேர்ச்சி அடையாதவர்களுக்கு, இரு தேர்வுகளிலும் பெற்ற, மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பிறகே, தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Changes in varsities Act opposed

Changes in varsities Act opposed The Hindu Bureau MADURAI 13.09.2026 The members of the Madurai Kamaraj, Manonmaniam Sundaranar, Mother Tere...