Friday, June 7, 2019

‛'நீட்' எழுத டாக்டருக்குஉயர்நீதிமன்றம் அனுமதி

Added : ஜூன் 07, 2019 03:17

மதுரை:தஞ்சாவூர் பட்டுக்கோட்டை டாக்டர் சதீஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு :

எம்.டி.,(குழந்தைகள் நல மருத்துவம்) முடித்துள்ளேன். இதை படித்தவர்கள் எம்.டி., (புற்றுநோய் மருத்துவம்) படிப்பிற்கான நீட் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி-எஸ்.எஸ்.,) தேர்வில் பங்கேற்க முடியாது என இந்திய மருத்துவக் கவுன்சில், முதுகலை மருத்துவப் படிப்பு விதிகளில் 2019 ல் திருத்தம் கொண்டுவந்தது. இது சட்டவிரோதம். அதை ரத்து செய்ய வேண்டும். தேர்வில் பங்கேற்க என்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.'
'நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு : மனுதாரரை 2019 நீட் (எஸ்.எஸ்.,) தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இந்த இடைக்கால உத்தரவு காரணமாக அதை தகுதியாகக் கொண்டு, மனுதாரர் எவ்வித உரிமையும் கோர முடியாது. இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும். விசாரணை 3 வாரம் ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024