Saturday, June 1, 2019

வீடுகளில் 'லோ வோல்டேஜ்' பிரச்னை

Added : மே 31, 2019 23:59

சென்னை, வீடுகளில் 'லோ வோல்டேஜ்' எனப்படும் குறைந்த மின்னழுத்த பிரச்னையால் மின் சாதனங்களை இயக்க முடியாமல் பொது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.தமிழகத்தில் வீடு உள்ளிட்ட அனைத்து இணைப்புகளுக்கும் மின் வினியோகம் செய்யும் பணியை மின் வாரியம் மட்டுமே செய்கிறது.தற்போது மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின் உற்பத்தி மின் கொள்முதல் இருந்தும் மின் சாதனங்களின் பழுது காரணமாக மின் தடை ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.இந்நிலையில் சென்னை உட்பட பல பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது.இதனால் மின் சாதனங்களை இயக்க வழக்கத்தை விட கூடுதல் மின்சாரம் செலவாகிறது.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:குறைந்த மின்னழுத்த பிரச்னையால் மின் விசிறி சுற்றுகிறதே தவிர காற்று வருவதில்லை; மேலும் 'மிக் ஷி, வாஷிங் மெஷின், அயர்ன் பாக்ஸ்' போன்ற சாதனங்களை இயக்க முடியவில்லை. இதுதொடர்பாக மின் ஊழியர்களிடம் புகார் அளித்தால் நடவடிக்கையும் எடுப்பதில்லை.பொறியாளர்களிடம் தெரிவித்தால் ஊழியரை அனுப்புவதாக கூறுகின்றனர்; யாரையும் அனுப்புவதில்லை.இந்த பிரச்னையால் வழக்கத்தை விட கூடுதல் மின்சாரம் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மின் சாதனங்கள் பழுதாவதுடன் மின் கட்டணமும் அதிகம் செலுத்த கூடிய நிலை உருவாகியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து மின் ஊழியர்கள் கூறியதாவது:டிரான்ஸ்பார்மர் மின் வினியோக பெட்டியில் இருந்து அவற்றின் திறன் அளவுக்கு மட்டுமே மின் சப்ளை செய்ய வேண்டும். திறனை விட அதிக மின் சப்ளை செய்யும் போது குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது.எனவே அந்த இடங்களை கண்டறிந்து கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் போட வேண்டும். இதுதொடர்பாக பொறியாளர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தங்கள் உயரதிகாரிகளிடம் விபரத்தை தெரிவித்து கூடுதல் சாதனங்களை வாங்க அலட்சியம் காட்டுகின்றனர்.மின்னழுத்த பிரச்னை தொடர்பான புகார்களை தெரிவிக்க நுகர்வோருக்கு தனி தொலைபேசி எண் வழங்கலாம். அதில் பெறப்படும் புகார்களின் அடிப்படையில் அந்த இடங்களில் கூடுதல் சாதனங்கள் பொருத்தலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Devising a foolproof system to ensure credibility of NEET

Devising a foolproof system to ensure credibility of NEET  Recommendations suggested by a seven-member committee to reform the exam have met...