Saturday, June 1, 2019

மருத்துவ கல்லூரி 'டீன்'கள் 4 பேர் ஓய்வு

Added : மே 31, 2019 23:43

சென்னை,அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் பணியாற்றும் நான்கு டீன்கள் இந்த மாதம் ஓய்வு பெற உள்ளதால் புதிய டீன்களை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன.சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் டீன் பொன்னம்பல நமச்சிவாயம் நேற்றுடன் ஓய்வு பெற்றார். கோவை இ.எஸ்.ஐ., பெரம்பலுார், கன்னியாகுமரி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளின் டீன்கள் இந்த மாதத்தில் ஓய்வு பெற உள்ளனர்.நான்கு இடங்களுக்கும் புதிய டீன்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக 10க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்து அந்தப் பட்டியலை தமிழக அரசிற்கு மருத்துவ கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ளது. மேலும் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனராக இருந்த அரசர் சீராளரும் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024