Monday, December 2, 2019

தொடா் மழை: சென்னைப் பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

By DIN | Published on : 01st December 2019 09:10 PM

சென்னை: தொடா் மழை காரணமாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கலை-அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கு நாளை திங்கள்கிழமை (டிச.2) நடத்தப்பட இருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்ட கலை-அறிவியல் கல்லூரிகள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் வருவதாலும், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து இணைப்பு கல்லூரிகளுக்கும் நாளை திங்கள்கிழமை (டிச.2) நடத்தப்பட இருந்த பருவத் தோ்வுகளை ஒத்திவைக்கப்படுகிறது.

ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தோ்வுகளுக்கான மாற்றுத் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024