மெழுகு பூசிய 'கப்' தவிர்த்து; சில்வர் டம்ளரில் தேநீர் ராஜ்பவனில் வந்த திடீர் மாற்றம்
Added : டிச 21, 2019 01:49
ஊட்டி,:ஊட்டியில் நடந்த உயர்கல்வி மாநாட்டில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், 'பிளாஸ்டிக்' மெழுகு பூசிய 'கப்' தவிர்க்கப்பட்டு, சில்வர் டம்ளரில் தேநீர் வழங்கப்பட்டது.
நீலகிரியில் சுற்று சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் மெழுகு பூசிய கப், 50 'மைக்காரன்' அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் உட்பட, 21 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், ஊட்டியில் நடந்த உயர் கல்வி மாநாட்டில் பங்கேற்ற கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பிளாஸ்டிக் நெகிழியை தவிர்ப்பது குறித்து உறக்க பேசினார். இதை தொடர்ந்து, தேநீர் இடைவேளையில், பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்ட 'மெழுகு கப்' களில் தேநீர் வழங்கப்பட்டது.
கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இது போன்ற விதி மீறல் நடந்தது, அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று நடந்த இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், சில்வர் டம்ளரில் டீ வழங்கப்பட்டது.
அங்கிருந்த அதிகாரிகள் ஒருவர் கூறுகையில்,'இன்று(நேற்று) வந்த 'தினமலர்' செய்தியை பார்த்த உயர் அதிகாரிகள், உடனடியாக சில்வர் டம்ளர் வைக்க உத்தரவிட்டனர்,' என்றார்.
No comments:
Post a Comment