Sunday, December 22, 2019

காவலனில் 2வது புகார் வக்கீல்கள் மூவர் கைது 

Added : டிச 21, 2019 23:11

சென்னை,சென்னை பிராட்வேயில் இருந்து கோயம்பேடு சென்ற பஸ்சில் பெண்களிடம் இளைஞர்கள் குடி போதையில் தகராறில் ஈடுபட்டனர்.உடனே காவலன் செயலியில் பெண்கள் புகார் அளித்தனர். போலீசார் இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். இதில் ஈரோடு அந்தியூரைச் சேர்ந்த அருள்குமார் 23 விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் 21 சேலம் மாவட்டம் ஆத்துாரைச் சேர்ந்த பொன்மணி மாறன் 24 என தெரியவந்தது.காஞ்சிபுரம் புதுப்பாக்கம் சட்டக் கல்லுாரியில் படித்த மூவரும் குடி போதையில் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. மூவரையும் பூக்கடை போலீசார் நேற்று கைது செய்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024