Friday, December 20, 2019

பொங்கல் விடுமுறைக்கு கர்நாடகா சுற்றுலா ரயில்

Added : டிச 19, 2019 22:30

சென்னை :பொங்கல் விடுமுறையை கொண்டாட, மதுரையில் இருந்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள தலைக்காவிரி உட்பட, கோவில்கள் மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்கு சென்று வர, தனி சுற்றுலா ரயில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரயில், 2020 ஜன., 16ல், மதுரையில் புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும். இப்பயணத்தில், மைசூரு அரண்மனை, சாமுண்டி மலை, கிருஷ்ணராஜசாகர் அணை, பிருந்தாவன் கார்டன், நஞ்சன்கூடு கண்டேஸ்வரர், மேல்கோட் செளுவநாராயணா மற்றும் யோகநரசிம்மர் கோவில்களுக்கு செல்லலாம்.

ஸ்ரீரங்கபட்டினம் ரங்கநாதர், காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரி, பாகமண்டலம், இயற்கை எழிலை ரசிக்க, கூர்க் ஏரியாவுக்கும் சென்று வரலாம். மத்திய - மாநில அரசு ஊழியர்களுக்கு, கட்டண சலுகை உண்டு.
சுற்றுலா தனி ரயிலில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்யலாம். ஐந்து நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 5,830 ரூபாய் கட்டணம்.

மேலும் தகவலுக்கு, சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் நிலையத்தில் உள்ள, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40680, 90031 40681 என்ற, மொபைல் போன்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Devising a foolproof system to ensure credibility of NEET

Devising a foolproof system to ensure credibility of NEET  Recommendations suggested by a seven-member committee to reform the exam have met...