Sunday, December 22, 2019

மருத்துவக்கல்லூரி சீட் ரூ.18.26 லட்சம் மோசடி

Added : டிச 21, 2019 22:53

ராமநாதபுரம் மருத்துவ கல்வி பயில சீட் வாங்கித் தருவதாக 18.26 லட்சம் ரூபாய் மோசடி செய்த சென்னை பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தை சேர்ந்தவர் ஆல்மூமின் 40. இவரது மனைவி அல்பதுாருனிசா 36. இவரிடம் 2019 ஏப்.25ல் சென்னையை சேர்ந்த பிரவீன்குமார் ராகவேந்திரா டிரஸ்டில் துணை இயக்குநராக இருப்பதாகவும், அதன் மூலம் தங்கள் மகளுக்கு வேலுார் மருத்துவக்கல்லுாரியில் சீட் வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதை நம்பியஅல்பதுாருனிசா பல்வேறு கட்டங்களில், வேறு, வேறு வங்கி கணக்கில் இருந்து பிரவீன்குமார் கணக்கில் 18.26 லட்ச ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் அவர் மருத்துவக் கல்லுாரியில் சீட் வாங்கித் தரவில்லை. பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிரவீன்குமாரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024