Sunday, December 22, 2019

ஜனவரியில் பொங்கல் பரிசு : அரசின் முடிவில்திடீர் மாற்றம்

Updated : டிச 22, 2019 00:17 | Added : டிச 21, 2019 21:53




தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ள போதிலும், அனைத்து மாவட்டங்களிலும், ஒரே நேரத்தில், உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், ஜனவரியில் பொங்கல் பரிசு வினியோகிக்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது

.தமிழக அரசு, 2.05 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு துண்டு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பொங்கல் பரிசு அறிவித்துள்ளது.

அவற்றை பயனாளிகளுக்கு வழங்குவதை, முதல்வர் இ.பி.எஸ்., நவம்பரில் துவக்கி வைத்தாலும், ரேஷன் கடைகளில் வழங்கவில்லை.ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும், 27 மாவட்டங்களில், இம்மாதம், 20ம் தேதி முதல், பொங்கல் பரிசை வழங்க, கூட்டுறவு துறை ஆயத்தமானது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.விசாரணையின் போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், 'நன்னடத்தை விதிகள் அமலில் இல்லாத, 10 மாவட்டங்களில், பொங்கல் பரிசை அரசு வழங்கலாம்; நடத்தை விதிகள் அமலில் உள்ள மாவட்டங்களில், தேர்தல் முடிந்த பின் வழங்க அனுமதிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

இந்த விளக்கத்தை பதிவு செய்த, உயர் நீதிமன்றம், வழக்கை, ஜனவரி, 10ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அனைத்து மாவட்டங்களிலும், இம்மாதம், 20ம் தேதி முதல், பொங்கல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தயார் நிலையில் இருந்தன.பின், சிலரின் ஆலோசனையால், தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் மட்டும் வழங்குவது என, மாற்றப்பட்டது. இதை எதிர்த்து தான், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், தேர்தல் ஆணையம், தேர்தல் நடக்காத, 10 மாவட்டங்களில், பொங்கல் பரிசு வழங்க தடை இல்லை என, தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை, ஜனவரி, 15ல் வருகிறது. ஆண்டுதோறும், பொங்கலுக்கு முந்தைய வாரத்தில் தான், ரேஷனில் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.இதனால், தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தாலும், அனைத்து மாவட்டங்களிலும், ஒரே சமயத்தில், ஜனவரியில், பொங்கல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.அந்த விபரம், அரசிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், முன்கூட்டியே வழங்கும்படி அரசு கூறினாலும், பொங்கல் பரிசு வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024