Friday, December 27, 2019

தேஜஸ் ரயில் தாம்பரத்தில் இனி நிற்கும்?

Added : டிச 26, 2019 23:08

சென்னை, 'தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும்' என ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.சென்னை எழும்பூர் - மதுரை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரயில் எழும்பூரில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட்டு பகல் 12:30க்கு மதுரை சென்றடையும். வழியில் திருச்சி மற்றும் கொடை ரோடு நிலையத்தில் மட்டுமே நின்று செல்லும்.இரு மார்க்கத்திலும் தாம்பரத்தில் நிறுத்தப்படுவது இல்லை. தாம்பரத்தில் நிறுத்த அனுமதிக்க வேண்டும் என பயணியர் சங்கங்கள் சேவை அமைப்புகள் சார்பில் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல அனுமதிக்குபடி ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024