Friday, December 27, 2019

மருத்துவர் கு.சிவராமன் - விகடன் இணைந்து நடத்தும் 'நலந்தானா' நல்வாழ்வுக் கருத்தரங்கம்!

https://www.vikatan.com/lifestyle/medicine/health-conference-at-anna-centenary-library-on-december-28-2

அலோபதி, ஆயுர்வேதம், சித்தா, இயற்கை என அனைத்தையும் ஒருங்கிணைத்த மருத்துவக் கருத்தரங்கு இது.

மருத்துவர் சிவராமன்

'சுகர் வந்திருச்சா... அலோபதிதான் பெஸ்ட்' என்பார் பக்கத்து வீட்டுக்காரர். 'அலோபதிக்குப் போனா ஆயுசு முழுக்க மருந்து, மாத்திரை சாப்பிடணும். சித்தா தான் பெஸ்ட்' என்பார் எதிர்வீட்டுக்காரர்.

'நானெல்லாம் எல்லாத்தையும் டிரை பண்ணிட்டு இப்போ இயற்கை மருத்துவத்துக்கு மாறிட்டேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்க' என்பார் இன்னொருவர். யப்பா சாமிகளா.... எதுதான்யா சரியான மருத்துவம் என்ற குழப்பத்திலும் பதற்றத்திலும் சர்க்கரையின் யூனிட் இன்னும் கொஞ்சம் ஏறியிருக்கும்.

பலருக்கும் உள்ள இந்தக் குழப்பத்துக்குத் தீர்வுதான் என்ன?

பதில் சொல்கிறது 'நலந்தானா நல்வாழ்வுக் கருத்தரங்கம்'

அலோபதி, ஆயுர்வேதம், சித்தா, இயற்கை என அனைத்தையும் ஒருங்கிணைத்த மருத்துவக் கருத்தரங்கு இது.

சித்த மருத்துவர் கு.சிவராமனின் ஆரோக்யா சித்த மருத்துவமனையும் விகடனும் இணைந்து நடத்தும் இந்தக் கருத்தரங்கில் டாக்டர் சிவராமனுடன் இதயநோய் மருத்துவர் சுந்தர் (காவேரி மருத்துவமனை), சர்க்கரைநோய் மருத்துவர் ஷண்முகம் (ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி பேராசிரியர்), புற்றுநோய் மருத்துவர் ஜெபசிங் (மதுரை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்), நரம்பியல் மருத்துவர் பாலமுருகன் (சிம்ஸ் செல்லம் மருத்துவமனை, சேலம்), ஆயுர்வேத மருத்துவர் மகாதேவன் (தெரிசனங்கோப்பு மகாதேவன் வைத்தியசாலையின் தலைமை மருத்துவர்), இயற்கை யோகா மருத்துவர் சரண்யன் (கோவை ஆர்.கே.நேச்சர் க்யூர் தலைமை மருத்துவர்), சமூக சித்த மருத்துவர் பி.மைக்கேல் ஜெயராஜ் (தலைவர், உலக தமிழ் மருத்துவக் கழகம் மற்றும் ஆசிரியர்- கற்ப அவிழ்தம்), திருவனந்தபுரம் சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜெகன்னாதன், மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சியக இயக்குநர் சித்த மருத்துவர் சத்யராஜேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

இந்த விழாவில் பங்கெடுத்துக்கொள்வதால் விகடன் வாசகர்களுக்குக் கிடைக்கவிருக்கிற 5 நன்மைகள்...

* உங்கள் ஆரோக்கியம் தொடர்பான சந்தேகங்களையும் அதற்கானத் தீர்வுகளையும் மருத்துவ நிபுணர்களிடம் இலவசமாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.



Also Read
நலந்தானா நல்வாழ்வுக் கருத்தரங்கு! - நீங்களும் கலந்துகொள்ள விருப்பமா? #Video


* விழாவில், `சர்க்கரை முதல் புற்றுநோய்வரை', 'நோய் தடுக்க நோய் நீக்க பாதுகாப்பும் பரிந்துரைகளும்', 'நேற்றைய சித்தம் முதல் இன்றைய நவீனம் வரை', 'ஆயுர்வேதம் முதல் இயற்கை மருத்துவம்வரை' ஆகிய தலைப்புகளில் மருத்துவர்கள் பேசவிருக்கிறார்கள் என்பதால், இவை தொடர்பான மிகச் சரியான மருத்துவத் தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும். ஃபார்வர்டு செய்யப்படுகிற ஹெல்த் வாட்ஸ் அப் பற்றிய பயம் விளங்கும்.


* மரபு சிறுதானியங்கள் முதல் பாரம்பர்ய நெல் ரகங்கள் வரை, 'உங்களுக்கான நல் உணவுகள் எவை' என்று தெரிந்துகொள்வதற்கான உணவுக் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.


* மூலிகைகளின் அணிவரிசை, சித்த மருத்துவத் தொன்மையான நூல்களின் கண்காட்சி, சித்த ஆயுர்வேத மருந்துகளின் கண்காட்சியைக் கண்டு பயன்பெறலாம்.

* விகடன் வாசகர்களுக்கு அனுமதியும் ஆரோக்கியமான மதிய உணவும் இலவசம்.

மருத்துவம்

விழா நடைபெறுகிற நாள்: டிசம்பர் 29 - 2019 (ஞாயிற்றுக்கிழமை)நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை. இடம்: அண்ணா நூற்றாண்டு மைய நூலகம், சென்னை.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கீழே உள்ள படிவத்தை நிரப்பவும். விழாவுக்கு இன்னும் ஓரிரு நாள்களே இருப்பதால் உடனே பதிவு செய்யுங்கள். முதலில் பதிவுசெய்வோருக்கே முன்னுரிமை!


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024