Tuesday, December 24, 2019

'பொங்கல் பரிசு வேண்டாம்' விட்டுக்கொடுப்பவர்களை கவுரவிக்க திட்டம்

Added : டிச 24, 2019 00:26

பொங்கல் பரிசில் உள்ள, 1,000 ரூபாய் ரொக்கத்தை, தமிழக அரசுக்கு விட்டு கொடுக்கும், ரேஷன் கார்டுதாரர்களை கவுரவிக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.

எதிர்பார்ப்பு

சென்னையில், 2015ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பின், இலவச திட்டங்களுக்கு பதில், ஏரிகள் துார்வாருதல், சுத்தமான குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை, தமிழக அரசிடம், மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால், அரிசி கார்டுகள் வைத்திருக்கும்சிலர், இலவச அரிசி, பொங்கல் பரிசு, இலவச வேட்டி சேலைகளை வாங்குவதில்லை.ஆனால், ரேஷன் ஊழியர்களும், அதிகாரிகளும், அவர்களுக்கு வழங்கியது போல பதிவு செய்து, தாங்கள் எடுத்து கொள்கின்றனர். தமிழக அரசு, நடப்பாண்டு பொங்கலுக்கு, ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பரிசு தொகுப்பை வழங்கியது. இதனால், அரசுக்கு, 2,000 கோடி ரூபாய் செலவானது. பொங்கல் பரிசை வாங்க விரும்பாதவர்கள், அதை, அரசுக்கு விட்டு கொடுக்கும் வசதியை, பொது வினியோக திட்ட இணைய தளத்தில், உணவுத்துறை ஏற்படுத்தியது. ரேஷனில், பரிசு தொகுப்பு வினியோகம் துவங்கிய பின், தாமதமாக, விட்டு கொடுக்கும் வசதி துவங்கப்பட்டது. ரேஷன் கார்டு ரத்தாகாதுஇதனால், 'பரிசு வாங்கவில்லை எனில், ரேஷன் கார்டு ரத்தாகி விடும்' என்ற, வதந்தியை நம்பி, சிலர், வீட்டு வேலையாட்களிடம் கார்டுகளைகொடுத்து, பரிசு தொகுப்பை வாங்க கூறினர்; 30 ஆயிரம் பேர் மட்டும் பரிசுத் தொகுப்பை வாங்காமல், அரசுக்கு விட்டுக் கொடுத்தனர்.

இந்நிலையில், வரும் பொங்கலுக்கும், 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை, அரசு அறிவித்துள்ளது. இவை, உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், ஜனவரி, 5ம் தேதி முதல் வினியோகம் செய்யப்பட உள்ளன.

இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் பொருட்கள், பொங்கல் பரிசு வாங்கவில்லை என்றாலும், ரேஷன் கார்டுகள் ரத்தாகாது. பொங்கல் பொருட்கள், 1,000 ரூபாய் ரொக்கம் என, தனித்தனியாக அல்லதுஇரண்டையும், அரசுக்கு விட்டு கொடுக்கும் வசதி, இந்த முறையும் துவங்கப்பட உள்ளது. மென்பொருள் தயார்அதற்கு, என்ன செய்ய வேண்டும் என்பது, விரைவில் தெரிவிக்கப்படும். பரிசை விட்டு கொடுப்பவர்களை, கவுரவிக்கும் வகையில், அவர்களின் விபரம், பொது வினியோக திட்ட இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. விட்டு கொடுக்கும் வசதி குறித்து, விரைவில் தெரிவிக்கப்படும். இதற்கான மென்பொருள் தயாராகி வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024