Sunday, December 22, 2019

மருத்துவ மாணவர்களுக்கு மனித உரிமை கருத்தரங்கம்

Added : டிச 21, 2019 22:06

சென்னை : மருத்துவ மாணவர்களுக்கான, மனித உரிமை குறித்த கருத்தரங்கம், தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் நடந்தது.சென்னையில் உள்ள, தமிழக எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் பயிலும், மருத்துவ மாணவர்களுக்கு, 'மனித உரிமைகள்' குறித்த, ஒரு நாள் கருத்தரங்கம், நேற்று நடந்தது.

இந்த கருத்தரங்கத்தில், மனித உரிமைகள், அரசியல் அமைப்பு, உலகளாவிய பிரகடனங்கள், சர்வதேச உடன்படிக்கைகள் குறித்து விளக்கப்பட்டன. அதேபோல், குழந்தைகள் மற்றும் மகளிர் உரிமை, மருத்துவ நெறிமுறை மற்றும் தொழில் தர்மம், கொத்தடிமை தொழிலாளர், குழந்தை தொழிலாளர், ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் மக்களுக்கான உரிமை குறித்து, நீதிபதிகள் உரையாற்றினர்.

இந்த கருத்தரங்கில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், திடக்கழிவு மேலாண்மைக்கான கண்காணிப்பு குழு தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ஓய்வு பெற்ற நீதிபதிகள் கண்ணன், சந்துரு ஆகியோர், மனித உரிமை சட்டங்கள் குறித்து விளக்கினர்.கருத்தரங்கில், மருத்துவ பல்கலை துணை வேந்தர் சுதா சேஷய்யன், பதிவாளர் பரமேஷ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024