Friday, December 20, 2019

தேசிய சித்தா நிறுவன இயக்குனர் பொறுப்பேற்பு

Added : டிச 19, 2019 22:08

சென்னை :தேசிய சித்தா மருத்துவ ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக, தமிழகத்தை சேர்ந்த டாக்டர் மீனாகுமாரி நியமிக்கப் பட்டுள்ளனர்.சென்னை, தாம்பரத்தில், தேசிய சித்தா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக இருந்த பானுமதி, சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். அதன்பின், டாக்டர் முத்துக்குமார் இயக்குனர் பொறுப்பில் செயல்பட்டு வந்தார்.இந்நிலையில், இந்நிறுவனத்தின் இயக்குனராக, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, தமிழக அரசின் சித்த மருத்துவ கல்லுாரி முதல்வர் பொறுப்பில் இருந்த, டாக்டர் மீனாகுமாரி நியமிக்கப் பட்டுள்ளார். இவர், நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024