Friday, December 27, 2019

கடலூர் மருத்துவ கல்லூரிக்கு 35 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

Added : டிச 26, 2019 23:25

சென்னை, கடலுார் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரி அமைக்க 35 ஏக்கர் நிலம் ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மருத்துவ கல்லுாரி அமைக்க கடலுாரை அடுத்த அரிசி பெரியாங்குப்பத்தில் மருத்துவ சேவை இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள 58.49 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.அந்த நிலத்தை ஒப்படைக்கும்படி மருத்துவ கல்வி இயக்குனர் மருத்துவ மற்றும் ஊரக சேவை இயக்குனருக்கு வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து '35 ஏக்கர் நிலத்தை வழங்க தடையில்லை' என மருத்துவ சேவை இயக்குனர் அரசுக்கு தெரிவித்தார்.அதனால் மருத்துவக் கல்லுாரி துவங்க மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு 35 ஏக்கர் காலி நிலத்தை மாற்றி கொடுக்க உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுஉள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024