Friday, December 20, 2019

3 லட்சம் லிட்டர் தண்ணீர் திருட்டு ஆஸி.,யில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

Added : டிச 19, 2019 22:29


சிட்னி: ஆஸ்திரேலியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில், பொது தண்ணீர் தொட்டியில் இருந்து, 3 லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்டதால், போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காலநிலை மாற்றம், ஆஸ்திரேலிய நாட்டில் கடும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. புவி வெப்ப மயம் காரணமாக, ஆஸ்திரேலியாவில் மழை அளவு குறைந்து, நியூ சவுத் வேல்ஸ், கிரேட்டர் சிட்னி பகுதிகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதிக வெப்பம் காரணமாக, வனப் பகுதிகள் தீப்பிடித்து எரிகின்றன.

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, ஆஸ்திரேலிய அரசு, கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 'வாகனங்களை கழுவ, இரண்டு பக்கெட் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் நிரப்ப, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்' என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு, அபராதமும் விதிக்கப்படுகிறது. இதனால், தண்ணீருக்காக, ஆஸ்திரேலிய மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தண்ணீர் பஞ்சம் அதிக அளவில் உள்ளது. இங்கு, இவான் பிளைன்ஸ் என்ற இடத்தில், பொது தண்ணீர் தொட்டியிலிருந்து, 3 லட்சம் லிட்டர் தண்ணீரை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

தண்ணீர் திருடியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். 'டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில், யாராவது தண்ணீர் எடுத்துச் செல்வது குறித்து தெரிய வந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்' என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Devising a foolproof system to ensure credibility of NEET

Devising a foolproof system to ensure credibility of NEET  Recommendations suggested by a seven-member committee to reform the exam have met...