Thursday, December 26, 2019


பொங்கல் பொருள் விற்பனை? * உணவு வழங்கல் துறை எச்சரிக்கை

Added : டிச 26, 2019 00:39

சென்னை: 'பொங்கல் பரிசு பொருட்களை விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, உணவு வழங்கல் துறை எச்சரித்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், பொங்கலை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பொருட்களுடன், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட உள்ளது. தற்போது, கடைகளுக்கு, பொங்கல் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

மாதா மாதம், கடைகளுக்கு அனுப்பப்படும் ரேஷன் பொருட்களின் விற்பனை முடிந்ததும், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற, விற்பனை முனைய கருவியில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், பொங்கல் பரிசை அதில் பதிவு செய்தால், அது, காசுக்கு விற்பனை செய்த கணக்காகி விடும் என்பதால், அதைத் தவிர்க்குமாறு, ரேஷன் ஊழியர்களுக்கு அறிவுறுத்த, மாவட்ட வழங்கல் அதிகாரிகளை, உணவு வழங்கல் துறை எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024