Saturday, December 21, 2019

செங்கல்பட்டு - மும்பைக்கு சிறப்பு ரயில்

Added : டிச 21, 2019 01:46

சென்னை :செங்கல்பட்டில் இருந்து, காஞ்சிபுரம், திருத்தணி, ரேணிகுண்டா வழியாக, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், செங்கல்பட்டில் இருந்து, வரும், 25, ஜன., 1, 8ம் தேதிகளில், மாலை, 4:00க்கு புறப்பட்டு, மறுநாள் மாலை, 4:20 மணிக்கு, மும்பை சி.எஸ்.டி., நிலையம் சென்றடையும்.
இந்த ரயிலில், 'ஏசி' மூன்றடுக்கு பெட்டி மூன்று, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி, 14, முன்பதிவில்லா பெட்டிகள் நான்கு இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.***

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024