Friday, December 27, 2019

மருத்துவ பல்கலை தேர்வு விண்ணப்பிக்க அவகாசம்

Added : டிச 26, 2019 21:59

சென்னை ;தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஜனவரி, 7 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் பாரா மெடிக்கல் படிக்கும் மாணவர்கள், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக, பல மாணவர்கள் விண்ணப்பிக்காமல் உள்ளனர்.

எனவே, தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பல்கலையில், 2020 பிப்ரவரியில் நடைபெறும் தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்பிக்க, டிசம்பர், 3ல் அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்தது. கிறிஸ்துமஸ் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்வுக்கு அபராத தொகை இன்றி விண்ணப்பம் அளிக்க, 2020 ஜன., 7 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்கு, https://www.tnmgrmu.ac.in என்ற, இணையதளத்தை பார்வையிடலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024