Sunday, December 22, 2019


கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னை-திருச்சிக்கு சிறப்பு கட்டண ரயில்

By DIN | Published on : 22nd December 2019 03:05 AM

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர்-திருச்சிராப்பள்ளிக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

எழும்பூர்-திருச்சி: சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 23, 25 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06025) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு திருச்சிராபள்ளியை சென்றடையும்.
திருச்சி-சென்னை: திருச்சிராப்பள்ளியில் இருந்து டிசம்பர் 22, 24 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06026) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
சென்னை-எர்ணாகுளம்: சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 22-ஆம் தேதி இரவு 7 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82631) புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை சென்றடையும்
இதுதவிர, சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டன. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024