Sunday, December 22, 2019

வங்கி ஊழியர்கள் ,அதிகாரிகள் ஜனவரி, 8ம் தேதி, வேலைநிறுத்தம்

Added : டிச 21, 2019 21:57

சென்னை :பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், ஜனவரி, 8ம் தேதி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், வங்கிகளை தனியார் மயமாக்கவோ, இணைக்கவோ கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் உட்பட, ஐந்து சங்கங்கள், வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன.இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயத்தை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி, 8ல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். அதில், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என, ஆறு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். அன்றைய தினம், வங்கி சேவைகள் பாதிக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024