Friday, December 27, 2019


`280 கோடி பாக்கி இருக்கு; இனி டிக்கெட் கிடையாது!’-அரசு 

நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

அரசுத்துறை நிறுவனங்களுக்குக் கடன் வழங்க மாட்டோம் என ஏர் இந்தியா நிறுவனம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.


ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனம் சுமார் ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார் விற்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நடப்பு நிதி ஆண்டிலேயே விற்பனை செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கிறோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தைச் சந்திக்கும்போது எல்லாம் மத்திய அரசு நிதியுதவி வழங்கி வந்தது. அதனால் இத்தனை காலம் சமாளித்து வந்தனர். ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்குவதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

`ஊழியர்களின் பிரச்னைகளைத் தீர்க்காமல் நிறுவனத்தை விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம்' என்கிறார்கள் ஏர் இந்தியா ஊழியர்கள். விமானத்துக்கு எரிபொருள் வாங்கிய தொகையைக் கூட ஏர் இந்தியா நிறுவனத்தால் திரும்பச் செலுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்.

நிலுவைத் தொகையைச் செலுத்தாமல் எரிபொருள் வழங்க மாட்டோம் என எண்ணெய் நிறுவனங்கள் போர்க்கொடி தூக்கின. மத்திய அரசின் தலையீட்டுக்குப் பின்னர் இந்த விவகாரம் தீர்த்து வைக்கப்பட்டது.


அரசுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் பயணத்துக்கு முதல் தேர்வாக இருப்பது ஏர் இந்தியாதான். ஏர் இந்தியாவில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் தனியார் விமான சேவையை நாடுவார்கள். அரசுத்துறை நிறுவனங்களில் புக்கிங் செய்த டிக்கெட்டுக்கும் இன்னும் பணம் வரவில்லை எனப் புகார் வாசிக்கிறது ஏர் இந்தியா நிறுவனம்.

இந்நிலையில்தான் அரசுத்துறை நிறுவனங்களுக்குக் கடன் வழங்க மாட்டோம் என ஏர் இந்தியா நிறுவனம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

ஏர் இந்தியா

இதுகுறித்து பேசிய ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், `அரசுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்வதற்கு ஏர் இந்தியா நிறுவனம் டிக்கெட் வழங்கியுள்ளது. ஆனால், பல்வேறு நிறுவனங்கள் இன்னும் அந்த நிலுவைத் தொகையைச் செலுத்தவில்லை.

அரசுத்துறை நிறுவனங்களிடம் கடனை வசூலிக்கக் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. ரூ.268 கோடி அளவுக்குக் கடன் பாக்கி வைத்துள்ளனர். கடந்த வாரம் ரூ.50 கோடி வரை பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து பணம் வசூலிக்க நீண்ட நாள்கள் ஆகின்றன. கடன் தொகையை அரசு நிறுவனங்கள் திரும்பச் செலுத்த வேண்டும். இனிமேலும் கடனுக்கு டிக்கெட் வழங்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Devising a foolproof system to ensure credibility of NEET

Devising a foolproof system to ensure credibility of NEET  Recommendations suggested by a seven-member committee to reform the exam have met...