Thursday, December 26, 2019

'டாஸ்மாக்' விடுமுறை சரக்கு பதுக்கிய வக்கீல் கைது

Added : டிச 26, 2019 00:43

தஞ்சாவூர்,:தஞ்சை அருகே, 10 ஆயிரம் ரூபாய்க்கு மதுபாட்டில்களை வாங்கிச் சென்ற வழக்கறிஞரை, போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் அடுத்த, மெலட்டூர் - இரும்புதலை சாலையில், நேற்று முன்தினம் இரவு, பாபநாசம் போலீசார், வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த, 'டாடா பொலிரோ' வாகனத்தை சோதனை செய்தனர். அதில், மூன்று அட்டை பெட்டியில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் இருந்தது. போலீசார் பாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அரித்துவாரமங்கலம் ராஜ்குமார், 35; வழக்கறிஞர் என்பதும், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மூன்று நாட்கள், 'டாஸ்மாக்' கடைகள் விடுமுறை என்பதால், மது பாட்டில்கள் வாங்கி சென்றதும், தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார், ராஜ்குமாரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024