Thursday, December 19, 2019

முதுகலை மருத்துவப் படிப்பு சேர்க்கை மாநில இட ஒதுக்கீடு பின்பற்ற வழக்கு

Added : டிச 19, 2019 00:22

மதுரை, :\முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், மாநில அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்ற தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை அண்ணாநகர் டாக்டர் கார்த்திக் ராஜன் தாக்கல் செய்த மனு:முதுகலை மருதுவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடங்களை மருத்துவக் கவுன்சில் குழுவும், 50 சதவீதத்தை இட ஒதுக்கீட்டில் மாநில அரசும் நிரப்பும். இதில் 25 சதவீத இடங்கள் தொலைதுார மற்றும் மலைப்பகுதியில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதன்படி பணிபுரியும் பகுதிக்கேற்ப 10 முதல் 30 சதவீதம் கூடுதல் மதிப்பெண் சலுகை கிடைக்கும். 

இதனால் பல டாக்டர்கள் தொலைதுார கிராமங்கள், மலைப்பகுதிகளில் பணிபுரிகின்றனர். குழந்தைகள் இறப்பு குறைந்துள்ளது.முதுகலை மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை விதிகளில், இந்திய மருத்துவக் கவுன்சில் திருத்தம் செய்தது. இதனால், அகில இந்திய தகுதி அடிப்படையில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். தொலைதுார கிராமங்கள், மலைப்பிரதேசங்களில் பணிபுரிய டாக்டர்கள் முன்வரமாட்டார்கள்.முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை நடைமுறை (2017) மற்றும் முதுகலை மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை விதிகள் திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்.முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், 50 சதவீத இடங்களை மாநில அரசின் இட ஒதுக்கீடு கொள்கை அடிப்படையில், மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு கார்த்திக் ராஜன் மனு செய்தார்.தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பில், 'இந்திய மருத்துவக் கவுன்சில் விதி செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,' என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024