நிராகரிப்பு! 'நிர்பயா' வழக்கில், குற்றவாளியின் சீராய்வு மனு...
Updated : டிச 19, 2019 00:21 | Added : டிச 18, 2019 22:19
புதுடில்லி:'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரில் ஒருவரான அக் ஷய் குமார் தாக்கல் செய்த சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. இதையடுத்து, குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
டில்லியில், கடந்த, 2012-ம் ஆண்டு, 23 வயதான மருத்துவக் கல்லுாரி மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கொண்ட கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி, சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இந்த சம்பவம், டில்லி மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், இதுவரை வெளியிடப்படவில்லை. ஊடகங்கள், மாணவிக்கு, 'நிர்பயா' என பெயரிட்டு அழைத்தன.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக் ஷய் குமார் சிங், 16 வயது சிறுவன் என, ஆறு பேரை, டில்லி போலீசார் கைது செய்தனர்.இவர்களில் ராம் சிங், திஹார் சிறையில், 2013ல் தற்கொலை செய்து கொண்டார். 16 வயது சிறுவனுக்கு, சிறார் நீதி சட்டப்படி, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற நான்கு பேருக்கும், விசாரணை நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனையை, டில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.
இதில், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. நான்காவது குற்றவாளி யான அக் ஷய் குமார் மட்டும், சீராய்வு மனு தாக்கல் செய்யாமல் இருந்தார். மூன்று பேரும், தண்டனையை குறைக்க கோரி அனுப்பிய கருணை மனுவை, டில்லி கவர்னர் நிராகரித்தார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், அக் ஷய் குமார் சிங் சார்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி ஆர்.பானுமதி தலைமையில், நீதிபதிகள் அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
நெருக்கடி
மனுதாரர் அக் ஷய் குமார் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறியதாவது:இந்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில், பல குளறுபடிகள் உள்ளன. ஊடகங்கள், அரசியல் கட்சிகள், பொது மக்களால் பெரும் நெருக்கடி ஏற்பட்டது, நெருக்கடிக்கு உட்பட்டு, போலீசார், சரியாக விசாரிக்காமல் நடவடிக்கை எடுத்தனர். ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடி மிகவும் அதிகமாக இருந்தது.
இதற்கு, தெலுங்கானா மாநிலத்தில், போலீசார், சமீபத்தில் நடத்திய போலி 'என்கவுன்டரே' சரியான உதாரணம். இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனனையை நிறைவேற்ற, டில்லி அரசு துடிக்கிறது. இதைவிட கொடூர குற்றங்களை செய்து, துாக்கு தண்டனை விதிக்கப் பட்டு உள்ள குற்றவாளிகளுக்கு, இன்னும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு ஏ.பி.சிங் கூறினார்.
டில்லி அரசு சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:இந்த வழக்கை, விசாரணை நீதிமன்றம், டில்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை ஏற்கனவே விசாரித்து, துாக்கு தண்டனையை உறுதி செய்து உள்ளன. இதன் பின், சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இந்த கொடூர சம்பவத்தில், அக் ஷய்க்கு உள்ள தொடர்பு, ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தடயவியல் மற்றும் மரபணு சோதனைகள், அக் ஷய்க்கு உள்ள தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளன.இவ்வாறு, துஷார் மேத்தா கூறினார்.
இரு தரப்பு வாதத்துக்குப் பின், நீதிபதிகள் கூறியதாவது:இந்த வழக்கை, மீண்டும் மீண்டும் விசாரிக்க எந்த தேவையும் இல்லை. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த பின் தான், குற்றவாளி களுக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கில், மூன்று நீதிமன்றங்கள் விசாரித்து, தீர்ப்பு அளித்த பின், விசாரணையில் குற்றம் சொல்வது சரியல்ல. அக் ஷய் குமாரின் சீராய்வு மனு நிராகரிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
ஒரு வாரம் தான்
தன்பின் வழக்கறிஞர் ஏ.பி.சிங், ''ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்ய, அக் ஷய் குமாருக்கு, மூன்று வாரம் அவகாசம் வேண்டும்,'' என்றார்.சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ''கருணை மனுவை, ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, சட்டத்தில் கூறப்பட்டுஉள்ளது,'' என்றார்.அதற்கு நீதிபதிகள், 'கருணை மனு தாக்கல் செய்ய, காலக்கெடு விதிக்கும் விவகாரத்தைத் தவிர்க்கிறோம். சட்டத்தில் என்ன நடைமுறையோ, அதைப் பின்பற்றலாம்' என கூறினர்.
திஹார் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
நிர்பயா பலாத்கார வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளுக்கும் தண்டனையை நிறைவேற்ற, 'வாரன்ட்' பிறப்பிக்க கோரி,டில்லி நீதிமன்றத்தில், டில்லி போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். அக் ஷய் குமாரின் சீராய்வு மனு மீது, உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்காக காத்திருப்பதாக கூறி, போலீசார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, மதியத்துக்கு, நீதிபதி சதிஷ் குமார் அரோரா தள்ளி வைத்தார்.
அக் ஷய் குமாரின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, டில்லி போலீசாரின் மனுவை விசாரித்த நீதிபதி, 'குற்றவாளிகள் நான்கு பேரும், ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்ய போகின்றனரா என்பதை, ஒரு வாரத்துக்குள், திஹார் சிறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்' எனக்கூறி, விசாரணையை, ஜனவரி, 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
எங்களுக்கு என்ன உரிமை உள்ளது?
குற்றவாளி அக் ஷய் குமாரின் சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அறிந்த, நிர்பயாவின் தாய் ஆஷா, 'நீதியை நெருங்கிவிட்டோம்' என, மகிழ்ச்சியுடன் கூறினார்.எனினும், குற்றவாளிகள், கருணை மனு தாக்கல் செய்ய, ஒரு வாரம் அவகாசம் அளித்த, டில்லி நீதிமன்ற உத்தரவை கேட்ட ஆஷா கதறி அழுதார்.
அவரை சமாதானப்படுத்திய நீதிபதி, 'உங்கள் மீது, எங்களுக்கு முழு கருணை உள்ளது. அவர்கள் சாகப் போகின்றனர் என்பது, எங்களுக்குத் தெரியும்.'இருந்தாலும், குற்றவாளிகளுக்கும், கருணை மனு அளிக்க உரிமை உள்ளது. உங்களின் கருத்தை, நாங்கள் கேட்கிறோம். ஆனால், சட்டப்படி அனைத்தும் நடக்க வேண்டும்' என்றார்.'அப்படியானால், எங்களின் உரிமைக்கு என்ன பதில்' என கேட்டு, ஆஷா கதறி அழுதார்.
பின், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் அவகாசம் அளித்து வருகிறது. குற்றவாளிகளின் உரிமைகளை தான், நீதிமன்றம் பார்க்கிறது; எங்களின் உரிமையை அல்ல. அடுத்து வழக்கு விசாரணை நடக்கும் போது, தீர்ப்பு வழங்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை,'' என்றார்.
இறுதி கட்ட தீர்வு காணும் மனு
நான்கு குற்றவாளிகளில் ஒருவரான, முகேஷ் குமாரின் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா கூறிய தாவது:இந்த வழக்கில், ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன், இறுதி கட்ட தீர்வு காணும் முயற்சியாக, முகேஷ் குமார் சார்பில், மனு தாக்கல் செய்ய உள்ளேன். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்த பின் தான், கருணை மனு தாக்கல் செய்வது பற்றி முடிவு செய்ய முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார், நிர்பயா சம்பவம் நடந்தபோது தனக்கு, 18 வயது பூர்த்தியாகவில்லை எனக் கூறி, டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்பயா வழக்கில் இதுவரை நடந்தவை
டிச., 16, 2012: ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி பலாத்காரம்.
டிச., 18, 2012: ராம் சிங் உட்பட, நான்கு பேர் கைது.
டிச., 21, 2012: 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது.
டிச., 29, 2012: சிங்கப்பூர் மருத்துவமனையில் நிர்பயா மரணம்.
ஜன. 2, 2013: நிர்பயா வழக்கை விசாரிக்க, விரைவு நீதிமன்றம் அமைப்பு.
ஜன. 3, 2013: போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்.
ஜன. 17, 2013: விரைவு நீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்.
மார்ச், 11, 2013: திஹார் சிறையில், ராம் சிங் தற்கொலை.
ஆக., 31, 2013: சிறுவனுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.
செப்., 10, 2013: முகேஷ், வினய், அக் ஷய், பவன் ஆகியோர் குற்றவாளிகள் என, விரைவு நீதிமன்றம் அறிவிப்பு.
செப்., 13, 2013: குற்றவாளிகள் நால்வருக்கும் துாக்கு தண்டனை விதிப்பு.
செப்., 13, 2014: குற்றவாளிகளின் துாக்கு தண்டனையை, டில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
மே, 5, 2017: நான்கு பேரின் துாக்கு தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
செப்., 9, 2018: முகேஷ், வினய், பவன் ஆகியோரின் சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
டிச., 18, 2019: அக் ஷய் குமாரின் சீராய்வு மனு நிராகரிப்பு.

No comments:
Post a Comment