Thursday, December 19, 2019

தேர்தல் பகுதிகளில் பொங்கல் பரிசு ரூ.1,000

Added : டிச 18, 2019 22:34

சென்னை,: முதல்கட்டமாக, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில், வரும், 20ம் தேதி முதல், பொங்கல் பரிசு, 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், பரிசு தொகுப்பு வழங்குகிறது. இதுவரை, அவை, ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்பட்டன. தமிழகத்தில், 27 மாவட்டங்களில் உள்ள, ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, இம்மாத இறுதியில், இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.இதனால், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன், அரசு, பொங்கல் பரிசு திட்டத்தை அறிவித்து, அதை, பயனாளிகளுக்கு வழங்கும் பணியும் துவங்கப்பட்டது.

ரேஷன் கடைகளில், வரும், 20ம் தேதி முதல், பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்தது. அதற்கு ஏற்ப, பொருட்களும், பணமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.இந்நிலையில், தற்போது, முதல் கட்டமாக, உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஊரக பகுதிகளில் மட்டும், 20ம் தேதி முதல் வழங்குமாறும்; மற்ற பகுதிகளுக்கு பின்னர் வழங்குமாறும், அதிகாரிகளுக்கு, கூட்டுறவு துறை சார்பில், வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024