Friday, December 6, 2019

தாம்பரம் - எழும்பூருக்கு டி.டி.ஆரிடம் கட்டணம் நெல்லை கட்டணம் பரிசோதகரிடம் தரலாம்

Added : டிச 05, 2019 23:51

சென்னை: நெல்லை, பொதிகை ரயில்களில், எழும்பூரில் இருந்து, தாம்பரம் வரை செல்வதற்கான கட்டணத்தை, இன்றும், நாளையும் டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்தலாம்.

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி நடந்ததால், அக்டோபர், 4ல் இருந்து, டிசம்பர், 7 வரை, நெல்லை, பொதிகை ரயில்கள், எழும்பூர் - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டிருந்தன.அதனால், இந்த ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவர்கள், நாளை வரை, தாம்பரத்தில் இருந்து கிளம்புவதாக பதிவு செய்தனர். ஆனால், இந்த இரண்டு ரயில்களும், நேற்று முன்தினம் முதல், மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன.தாம்பரத்தில் இருந்து செல்ல முன்பதிவு செய்திருப்போர், இன்றும், நாளையும், எழும்பூரில் இருந்தும் பயணிக்கலாம்.எழும்பூர் - தாம்பரம் இடையேயான பயண கட்டணத்தை, டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்தலாம் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024