திகார் சிறையில் 'நிர்பயா' வழக்கின் குற்றவாளிகள் நிம்மதி
Updated : டிச 04, 2019 00:57 | Added : டிச 03, 2019 23:16
புதுடில்லி: 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கான துாக்கு தண்டனையை நிறைவேற்ற, டில்லி திஹார் சிறையில் ஆள் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
டில்லியில், 2012ல், நிர்பயா என்ற மருத்துவக் கல்லுாரி மாணவி, ஒரு கும்பலால் பேருந்தில் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிர்பயா, உயிரிழந்தார். இந்த வழக்கில், வினய் குமார், முகேஷ், பவன், அக் ஷய் ஆகிய நான்கு பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
தகவல்:
இவர்களது மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அரசிடமிருந்து உத்தரவு வந்ததும், எந்த நேரத்திலும், இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படலாம். ஆனால், தற்போது இந்த நான்கு குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ள டில்லி திஹார் சிறையில், துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஊழியர் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, சிறை வட்டாரங்கள் கூறியதாவது: தற்போதெல்லாம், மிக அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே, குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. எனவே, துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு, நிரந்தரமாக ஒரு ஊழியரை பணியமர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்த முறையில் தான், ஆட்களை பணியமர்த்த முடியும். ஆனாலும், அதற்கு தகுந்த ஆட்கள் கிடைக்க வேண்டும்.
முயற்சி:
அருகில் உள்ள உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், இதற்கான ஆட்கள் கிடைக்கின்றனரா என முயற்சித்து வருகிறோம். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. திஹார் சிறையில், துாக்கு தண்டனையை நிறைவேற்ற ஆட்கள் இல்லாததால், நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேரும், தற்காலிகமாக நிம்மதி அடைந்துள்ளனர்.
உண்ணாவிரத போராட்டம்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில், ஒரு கும்பலால், பெண் டாக்டர் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர். டில்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், டில்லியில், நேற்று முதல், காலவரையற்ற உண்ணாவிர போராட்டத்தை துவங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: ஐதராபாத் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டுள்ளார். ராஜஸ்தானில், 6 வயது குழந்தை, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளது. இந்த சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு, ஆறு மாதங்களுக்குள் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கான சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்த போராட்டத்தை துவக்கியுள்ளேன். பிரதமர் மோடிக்கும், இது குறித்து கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையே, ஐதராபாத் சம்பவ குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வலியுறுத்தி, சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதில், 15 லட்சத்துக்கு அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

No comments:
Post a Comment