உலகின் விலை குறைந்த கார்’ என்று ஆறு வருடங்களுக்கு முன்பு பரபரப்பைக் கிளப்பியது டாடாவின் நானோ கார். இப்போது ‘உலகின் விலை குறைந்த டாக்ஸி’ என்று பரபரப்பைக் கிளப்பத் தயாராக நிற்கிறது அதே நானோ.
பெங்களூரில் உள்ள பிரபல 'Taxi for Sure' என்னும் கால் டாக்ஸி நிறுவனம், குறைந்த விலையில் பயணிக்க, தடதடவென ஆயிரக்கணக்கில் நானோ டாக்ஸிகளைக் களமிறக்கி இறக்கிறது.
இப்போது டெல்லியில் முக்கியமான சில டாக்ஸி நிறுவனங்கள் தடை செய்யப்பட்டு வரும் நிலையில், பெங்களூருவில் மொபைல் ஆப் மூலம் புக் செய்யக்கூடிய இந்த நானோ டாக்ஸி அறிமுகமாகி இருக்கிறது.
கர்நாடகாவில் 26 நகரங்களில் இப்போது டாக்ஸி நானோக்கள் ஜிவ்வெனப் பறந்து கொண்டிருக்கின்றன. முதல் இரண்டு கி.மீ.க்கு 25 ரூபாய்; பின்பு ஒவ்வொரு கி.மீ.க்கும் 10 ரூபாய் என்ற மலிவான கட்டணத்தில் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன நானோ டாக்ஸிகள்.
‘‘ஆட்டோவிலேயே 1.5 கி.மீ.க்கு 25 ரூபாயும், அடுத்து ஒவ்வொரு கி.மீ.க்கும் 13 ரூபாயும் வாங்குகிறார்கள். நானோ வந்ததில் ரொம்ப சீப்பாகப் பயணம் செய்ய முடிகிறது!’’ என்று கன்னடத்தில் மகிழ்கிறார்கள் பெங்களூருவாசிகள்.
-தமிழ்
No comments:
Post a Comment